Connect with us

News

குழந்தை வேண்டி நரபலி 2 பெண்கள் கொலை !

Published

on

மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியர் எனும் பகுதியைச் சேர்ந்த பந்து மதுரியா மற்றும் மம்தா ஆகிய இருவருக்கும் திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை இதனால் குழந்தை பிறக்க வேண்டிம் என பல கோயில்களுக்குச் சென்று வந்துள்ளனர்.

அவர்களது உறவினர்களில் ஒருவரான நீரஜ் என்பவர் இந்த தம்பதியைப் பில்லி சூனியம் வைக்கும் சாமியாரிடம் அழைத்துச் சென்றுள்ளார் அந்த சாமியார் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் என்றால் நரபலி கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இந்த மாதம் 21ஆம் தேதி குவாலியரில் இறந்த ஒரு பெண்ணின் சடலம் இருப்பதாக காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது இதனை அறிந்து சென்ற போலீஸார் விசாரணை நடத்தியதில் இறந்தது பாலியல் தொழிலாளி என்பது தெரியவந்தது.

அந்தப் பெண்ணை நீரஜ் அழைத்துச் சென்று கழுத்து நெரித்து கொலை செய்து அவரது சடலத்தைச் பில்லி சூனியம் செய்வதற்காகச் சாமியாரிடம் கொண்டு செல்லும்போது விபத்து ஏற்பட்டுள்ளது இதனால் என்ன செய்ய என தெரியாமல் நீரஜ் சடலத்தை அப்படியே விட்டுவிட்டு தப்பி ஒட்டியுள்ளார்.

இது போன்று ஒரே வாரத்தில் இரு பெண்களை நீரஜ் கொலை செய்துள்ளார் இதன் அறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending