Connect with us

News

குழந்தையின் தலையை தூக்கி வந்த நாய் !

Published

on

மதுரையில் பச்சிளங்குழந்தையின் தலையை நாய் கவ்வி சென்ற சம்பவத்தில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு உடலை தேடும் பணி தீவிரம் அடைந்துள்ளது.

மதுரை பீபீ குளம் வருமானவரித்துறை அலுவலகம் எதிரில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் பணம் எடுப்பதற்காக செல்லூர் பகுதியை சேர்ந்த அய்யனார் என்ற இளைஞர் சென்றுள்ளார் அப்போது அவ்வழியே சென்ற நாய் பச்சிளம் குழந்தையின் தலையை கவ்வி சென்றதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து உடனடியாக போலீசாரிடம் தெரிவித்தார் அங்கு வந்த போலீசார் அந்த பச்சிளம் குழந்தையின் தலையை மீட்டனர் மீட்கப்பட்ட குழந்தையின் தலை மதுரை ராஜாஜி மருத்துவமனையில் பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து 2 தனிப்படை அமைக்கப்பட்டு குழந்தையின் உடலை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சந்தேகத்தின் பேரில் வழக்கு பதிவு செய்து கடந்த ஒரு வாரத்தில் பிறந்த குழந்தைகளின் பட்டியல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் துணையுடன் குப்பைத் தொட்டிகள் கால்வாய்கள் போன்ற இடங்களில் குழந்தையின் உடல் பகுதி இருக்கா என சோதனை செய்து வருகின்றன.

மறுபுறத்தில் குழந்தை நரபலி செய்துதான் கொலை செய்யப்பட்டார் என விசாரணை எழுந்துள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending