Connect with us

News

குப்பையில் கிடந்த 100 கிராம் தங்கம் துப்புரவு பெண்

Published

on

சென்னை திருவொற்றியூரை சேர்ந்த தூய்மைப் பணியாளர் மேரி இவர் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார் வழக்கம்போல் நேற்று திறந்து வேலையை பார்த்துக் கொண்டிருக்கும்போது குப்பையில் கிடந்த 100 கிராம் தங்க நாணயத்தை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனே அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று காவல்துறை அதிகாரியிடம் ஒப்படைத்து அவர்கள் அந்த தங்க நாணயத்தின் உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளார்.

அதே ஊரை சேர்ந்த கணேஷ் ராமன் என்ற 36 வயதுடைய இளைஞர் கொரியர் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார் அவர் சிறிது சிறிதாக சேர்த்து வைத்த பணத்தில் 100 கிராம் தங்க நாணயம் வாங்கி காகிதத்தில் பொதிந்து மெத்தையின் அடியில் வைத்துள்ளார் அவரது மனைவி வீட்டை சுத்தம் செய்யும் போது அவர் மனைவி ஏதோ காகிதம் என நினைத்து குப்பைகளை வெளியில் கொட்டியுள்ளார்.

இதைக்கண்ட துப்புரவு பணியாளர் மேரி அவரது நேர்மை குணத்தைக் காட்டும் வகையில் அந்த நாணயத்தை காவலரிடம் கொடுத்தது மிகுந்த துய்மை பணியாளர்களிடம் மரியாதையை ஏற்படுத்தி உள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending