Connect with us
குன்னூர் விரைந்து செல்கிறார் மு.க.ஸ்டாலின் !!!! குன்னூர் விரைந்து செல்கிறார் மு.க.ஸ்டாலின் !!!!

News

குன்னூர் விரைந்து செல்கிறார் மு.க.ஸ்டாலின் !

Published

on

குன்னூர் நீலகிரி பகுதியில் இன்று நடந்த பயங்கரமான ஹெலிகாப்டர் விபத்தில் 14 பேர் சிக்கி உள்ளனர் இதில் 2 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர் மேலும் முப்படைத் தலைவர் பிபின் ராவத் இந்த ஹெலிகாப்டரில் இருந்துள்ளார்.

இந்தியாவின் மிக முக்கிய நபரான பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மேலும் சில கமாண்டோக்கள் போன்றவர்கள் இந்த ஹெலிகாப்டரில் இருந்து உள்ளனர் இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியது திடீரென ஒரு மிகப் பெரிய சத்தம் கேட்டது அதனை அடுத்து மரங்கள் அழிந்தன பிறகு தீப்பிடித்து எரிந்தது.

குன்னூர் விரைந்து செல்கிறார் மு.க.ஸ்டாலின் !!!!
குன்னூர் விரைந்து செல்கிறார் மு.க.ஸ்டாலின்

இந்த விமான விபத்தில் தற்போது 12 பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் இரண்டு பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் சிகிச்சைக்காக முழு ஒத்துழைப்பையும் மாநில அரசு வழங்கி வருகிறது.

மேலும் மீட்பு பணியினர் இந்த இடத்தில் இருந்து இராணுவ வீரர்களை தூக்கி செல்ல மிகவும் கடினமாக இருக்கிறது மேலும் பல ராணுவ அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராணுவ வீரர்களை தேடும் பணியில் இறங்கியுள்ளனர்.

இந்த சம்பவத்தை நேரில் கண்டு ஆய்வு செய்ய தமிழகத்தின் முதலமைச்சர் மு க ஸ்டாலின் நான்கரை மணிக்கு சம்பவ இடத்திற்கு புறப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது மேலும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி விபத்து நடந்த இடத்திற்கு செல்லலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending