Connect with us

News

குடும்பத்துடன் நாடு திரும்பினார் விஜயகாந்த்!!

Published

on

நடிகர் விஜயகாந்தின் உடல்நிலையில் முன்னேற்றம் சிகிச்சைக்குப்பின் துபாயிலிருந்து இன்று காலை சென்னைக்கு திரும்பியுள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை குறைவால் சிகிச்சை பெற்று வந்தார். இவர் சிகிச்சை பெறுவதற்கு துபாயில் இருக்கும் உயர் தர வரிசை மருத்துவமனையில் ஆண்டுதோறும் உடல் பரிசோதனை செய்வதற்காக செல்வார்.

மேலும் இவர் இரண்டு ஆண்டுகளாக உடல் பரிசோதனை செய்வது சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் கொரோனா தொற்று காரணமாக இவர் துபாய் செல்ல முடியாமல் போனது. இதன் காரணமாக இவர் சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

கடந்த மாதம் இவர் உடல்நிலை மிக மோசமான நிலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு சில நாட்கள் கழித்து உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாக மருத்துவமனை நிபுணர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் மருத்துவ பரிசோதனைக்காக கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி தன்னுடைய இளைய மகன் ‘சண்முக பாண்டியன்’ உதவியோடு இவர் துப்பாக்கி புறப்பட்டு சென்றார்.

துபாயில் இருந்த படி ட்விட்டர் பக்கத்தில் நான் நல்ல உடல் நலம் பெற்று இருக்கிறேன். நான் நடித்த ‘சத்தியம்’ திரைப்படத்தை என் சிகிச்சைக்கு முன்பு நான் பார்த்துவிட்டு சென்றேன் என்று தன் ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்திருந்தார்.

இந்நிலையில் சிகிச்சை முடிந்து இன்று செப்டம்பர் 11 எமிரேட்ஸ் விமானத்தில் சென்னை வந்தடைந்தார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending