Connect with us

News

கார்களில் புகைப்படங்கள் ஒட்ட தடை !!

Published

on

படங்களுக்கு தடை வாகனங்களில் ஒட்டப்பட்டுள்ள தலைவர்களின் படத்தை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஆட்டோக்கள் பஸ் பைக் போன்ற வாகனங்களில் நடிகர் மற்றும் தலைவர்களின் படங்களை ஒட்டி இருப்பது சட்டப்படி குற்றம் என்ற குற்றச்சாட்டின் படி சில வருடங்களாக இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்கு தொடர்ந்து வந்தது.

இதன்படி இந்த வழக்கை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி விசாரணையின் மூலம் கூறுகையில் தலைவர்கள் மட்டும் அரசியல் சார்ந்த புகைப்படங்கள் வண்டிகள் பின்னால் மற்றும் முற்பகுதியிலும் ஓட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சட்டத்தை ஏற்காது ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் கடும் அபராதமும் விதிக்க கூடும் என்று எச்சரித்துள்ளார்.

மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வண்டியின் முன்னால் பம்பர் வைத்திருக்கக் கூடாது என்ற சட்டமும் அரங்கேறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற வாகனங்களில் முன்னால் பம்பர் இருக்கும் வாகனங்களை போலீசார் முடக்கி அதிக அபராதம் விதித்தது குறிப்பிடதக்கது.

தலைவரின் புகைப்படங்களை வாகனங்களில் ஓட்டுவது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு விசாரணை அடுத்த வாரம் துவங்க உள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending