Connect with us

News

கல்லூரி மாணவர்களுக்கு நேரடி செமஸ்டர் தேர்வு !

Published

on

கொரோனா தொற்றின் காரணமாக தமிழகத்தில் மட்டும் அல்லாமல் பல மாநிலங்களிலும் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்பட்டன.

அதில் அனைத்து மாணவர்களும் வெற்றி பெற்றனர் மேலும் இப்போது கொரோனா தொற்றின் வேகம் குறைந்தவுடன் அனைத்து கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் திறக்கப்பட்டன.

இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மற்றும் ஆன்லைன் தேர்வுகள் நடத்தாமல் நேரடி வகுப்புகள் மற்றும் நேரடி தேர்வுகள் நடத்த உயர் கல்வித் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதனை பொறுத்துக் கொள்ள முடியாத கல்லூரி மாணவர்கள் பல இடங்களில் ஆன்லைன் தேர்வு வேண்டுமென போராட்டம் நடத்தினர் ஆனால் மாணவர்களை கைது செய்து அவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும் ஆன்லைன் தேர்வுகள் நடத்த மாணவர்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட வேண்டுமெனவும் அதன்பிறகு அவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை நீக்கவேண்டும் எனவும் அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending