Connect with us

News

கல்லூரி மாணவன் கிணற்றில் குதித்து தற்கொலை!

Published

on

கல்லூரி மாணவன் தற்கொலை நாமக்கல் மாவட்டம் அருகே தேர்வு பயத்தின் காரணமாக தனியார் கல்லூரி மாணவர் ஒருவர் கிணற்றில் குதித்துத் தன்னுயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அந்த ஊரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே காட்டுப் பகுதியை சேர்ந்தவர் சின்ராஜ் கட்டுமான தொழிலாளியான இவரது மகன் கோவிந்தராஜ் என்பவர். ஆவார் இவர் பொறியியல் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று கரூரில் நடைபெற்ற இந்த செயல்முறை தேர்வுக்காக நேற்று இரவு முழுவதும் மாணவன் கோவிந்தராஜ் மிகக் கடுமையாகவும் தூங்காமலும் படித்துள்ளார்.

இருப்பினும் தேர்வு கல்வி பயத்தின் காரணமாக கோவிந்தராஜ் இன்று காலை கல்லூரிக்கு சென்று வருவதாக பெற்றோரிடம் சொல்லிவிட்டு பாளையம் பகுதியில் விவசாய தோட்டத்தில் குதித்துத் தன்னுயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.

இதையடுத்து கல்லூரி மாணவன் அடையாள அட்டை உள்ளிட்ட பகுதியில் கூட்டின் மேற்பகுதியில் இருந்ததைக் கண்டு தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து கிணற்றில் மூழ்கிய மாணவனை இருபது நிமிடப் போராட்டத்திற்குப் பிறகு மீட்டனர்.

இதற்கிடையே சம்பவ இடத்திற்கு வந்த பாளையம்பட்டி போலீசார் உயிரிழந்த மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தேர்வு பயத்தின் காரணமாக கல்லூரி மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending