Connect with us

News

கரூர் பாலியல் வழக்கில் ஆசிரியர் தற்கொலை !

Published

on

கரூர் மாவட்டத்தில் சில தினங்களுக்கு முன்பு பரணி வித்யாலயா என்ற தனியார் பள்ளியில் படித்து கொண்டிருந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கரூர் மாவட்டத்தையே சோகத்தில் ஆழ்த்தியது.

மேலும் அந்த மாணவி கடிதம் ஒன்றை எழுதி வைத்து தற்கொலை செய்து உள்ளார் அந்த கடிதத்தில் நான் இந்த உலகில் வாழ மிகவும் ஆசைப்பட்டேன் ஆனால் என்னால் வாழ முடியவில்லை எனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் அந்த நபரை சொல்ல விரும்பவில்லை எனவும் அவர் அந்தக் கடிதத்தில் கூறியிருந்தார்.

இந்த கடிதம் இந்த மாணவியின் வீட்டிலிருந்து காவலர்களுக்கு கிடைத்தவுடன் காவலர்கள் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர் மேலும் அந்த பள்ளியின் ஆசிரியர்கள் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் அனைவரையும் தீவிர விசாரித்தனர்.

அதன் பிறகு இன்று அதே பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றும் சரவணன் அவருக்கு வயது 42 அவர் தனது மாமனார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் அனைவரும் இவர்தான் அந்த மாணவியின் தற்கொலைக்கு காரணம் என கூறினார்கள்.

ஆனால் அந்த ஆசிரியர் தற்கொலை செய்வதற்கு முன் ஒரு கடிதம் ஒன்றை எழுதி விட்டு தற்கொலை செய்துள்ளார் அந்த கடிதத்தில் நான் ஒரு தவறும் செய்யவில்லை ஆனால் மாணவர்கள் என்னைக் கேலி செய்கிறார்கள் நான் தான் அந்த மாணவியின் தற்கொலைக்கு காரணம் எனவும் அவர்கள் கூறுகிறார்கள் இதனால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன் எனவும் மனவருத்தத்துடன் எழுதியுள்ளார்.

மேலும் விசாரணையில் இந்த ஆசிரியர் மீது எந்த தவறும் இல்லை எனவும் இந்த ஆசிரியரை மாணவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கண்டிப்பான ஆசிரியர் எனவும் இவர் மீது எந்த குற்றச்சாட்டையும் மாணவர்கள் முன்வைக்கவில்லை எனவும் காவலர்கள் கூறினார்கள்.

மேலும் காவலர்கள் இந்த இரு வழக்குகளையும் வைத்து விசாரணையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளனர் கூடிய விரைவில் உண்மையான குற்றவாளி மாட்டிக் கொள்வார் எனவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending