Connect with us

News

கன்னியாகுமரி, திருவள்ளுவர் சிலை அமைத்து 20 ஆண்டுகள் கடந்தன

Published

on

கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை உப்புக் காற்றால் சேதம் அடையாமல் தடுக்கும் வகையில் ரசாயன கலவை பூசும் பணி விரைவில் தொடங்கும் என சுற்றுலா வளர்ச்சி கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே என்று சொல்லும் அளவிற்கு வாழ்ந்து மறைந்தார் திருவள்ளுவர்.

எப்படி வாழவேண்டும் என்பதை இரண்டு அடிகளில் உலகிற்கு எடுத்துரைத்தவர்.

உலகப் புகழ் பெற்ற திருவள்ளுவர் சிலை:

திருக்குறளை உலகப்பொதுமறை என்று உலக மக்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ள வைத்த பெருமைக்கு சொந்தக்காரர் தான் திருவள்ளுவர்.

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரி கடலின் நடுவே நீர் மட்டத்திலிருந்து 30 அடி உயரமுள்ள பாறையின் மீது 133 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

உலகப் புகழ் பெற்ற திருவள்ளுவர் சிலை திருக்குறளில் அறத்துப்பால் அமைந்த 48 அதிகாரங்களைக் குறைக்கும் வகையில் 48 அடி பீடமும் பொருட்பால் இன்பத்துப்பால் அமைந்த 95 அதிகாரங்களைக் குறைக்கும் வகையில் வள்ளுவர் சிலையும் அமைத்துக் திட்டம் கொடுத்தார் கலைஞர்.

20 ஆண்டுகளுக்கும் மேலாக கம்பீரமாக:

இச்சிலை அமைக்கும் பணி 1990 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டாலும் கிடப்பில் போடப்பட்டது பிறகு மீண்டும் 1996 ஆம் ஆண்டில் அப்போதைய முதலமைச்சர் கலைஞரால் தொடங்கப்பட்டு 2000 ஆவது ஆண்டில் ஜனவரி 1ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது.

உலகில் இதுபோன்ற கருங்கற்களால் ஆன சிலை வேறெங்கும் இல்லை என்கிற பெருமையைப் பெற்றுள்ளது.

இந்தச் சிலை உப்புக் காற்றால் சேதம் அடையாமல் இருக்க நான்காண்டுகளுக்கு ஒரு முறை ரசாயன கலவை பூசப்பட்டு வருகிறது.

இந்த சிலை முறையான பராமரிப்பு காரணமாக கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கம்பீரமாகக் காட்சியளிக்கிறது.

ரசாயன கலவை:

கடந்த 2004 சுனாமி பேரலையின் போதும் எவ்வித பாதிப்பும் இல்லாமல் உள்ளது சுற்றுலாப் பயணிகளை வியப்பில் ஆழ்த்தியது.

இந்த சிலையை சுற்றுலாப் பயணிகள் நேரில் சென்று பார்வையிட வசதியாக தமிழக அரசின் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் படகுச் சேவை இயங்கி வருகிறது.

இதன் மூலம் நாள்தோறும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை பயணிகள் நேரில் சென்று பார்வையிடலாம். கடந்த 2004, 2008, 2013 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் ரசாயன கலவை பூசப்பட்டு தொடர்ந்து திருவள்ளுவர் சிலை பராமரிக்கப்பட்டு வருகிறது.

சிலை சீரமைக்கவும் ரசாயன கலவை பூசவும் திட்டம்:

இதற்காக ஜெர்மனி இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்த ரசாயனக் கலவை இறக்குமதி செய்யப்படும்.

இந்நிலையில் 5வது முறையாக திருவள்ளுவர் சிலைக்கு இந்த ஆண்டு ரசாயன கலவை பூசப்பட்ட வேண்டும்.

இது குறித்து தமிழக சுற்றுலாத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக அதிகாரிகள் இணையவழி கூட்டத்தை நடத்தி திருவள்ளுவர் சிலை குறித்து விவாதித்தனர்.

ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் செலவில் சிலை சீரமைக்கவும் ரசாயன கலவை பூசவும் திட்டம் தயார் செய்யப்பட்டு அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.

சிலை புனரமைப்பு பணி:

இதற்கிடையில் அரசின் தொல்லியல் துறை அதிகாரிகள் சில நாட்களில் நேரடியாக வந்து ஆய்வு செய்ய உள்ளனர்.

இதனை தொடர்ந்து சிலை புனரமைப்பு பணி தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

1 Comment

1 Comment

  1. Pingback: யானைகள் 500 கி மீ நடந்ததால் குறட்டை விட்டு தூங்கியது.....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending