Connect with us

News

கனமழை பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

Published

on

பருவமழை நிற்காமல் தொடர்ந்து கனமழையாக பெய்து வருவதன் சூழ்நிலை காரணமாக பல நாட்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு பல மாவட்டங்களில் விடுமுறை அறிவித்தன.

தற்போது வடகிழக்குப் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை கொண்டிருப்பதால் சென்னையில் மிதமான மழை பெய்துகொண்டே இருக்கிறது அது சிறிது நேரத்தில் கனமழை ஆக மாறலாம் என சென்னை வானிலை ஆய்வு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் சென்னையில் சாலை ஓரங்களில் குளம் போல் நீர் காட்சியளிக்கிறது சாலைகளில் வாகனங்கள் செல்ல தடை ஏற்பட்டுள்ளதால் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது.

இதன் காரணமாக சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார் மேலும் சில மாவட்டங்களில் நாளை விடுமுறை எதிர்பார்க்கலாம்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending