Connect with us

News

கனமழை காரணமாக தடம்புரண்ட ரயில் !

Published

on

கேரள மாநிலம் கண்ணூரில் இருந்து கோயம்புத்தூர் சேலம் தர்மபுரி வழியாக பெங்களூர் யஷ்வந்த்பூர் செல்லும் விரைவு ரயில் இன்று அதிகாலை மூன்று முப்பது மணி அளவில் சேலத்தை கடந்து தர்மபுரி நோக்கி சென்று கொண்டிருக்கும் பொழுது ஒரு வனப்பகுதி அருகே பாறை கற்கள் சரிந்து விழுந்து ரயில் தண்டவாளத்தில் உரசியபடி கிடந்துள்ளது

சரிந்து விழுந்த கற்கள் மற்றும் பாறைகள் ரயில் என்ஜினில் சிக்கி எஞ்சின் மற்றும
B1,B2 S6,S7,S8,S9,S10 ஆகிய 5 பெட்டிகள் தடம் புரண்டன

ரயில் பெட்டிகள் தடம் புரண்டதில் 2834 பயணிகள் இந்த ரயில் பயணம் செய்துள்ளார்கள் இருப்பினும் எந்த பயணிகளுக்கும் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை.

பயணிகள் பேருந்து மூலம் தர்மபுரி ரயில் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர் அதன்பின் ரயில்வே பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending