Connect with us

News

கனமழையால் உயிரிழந்த விலங்குகள்

Published

on

அசாம் மாநிலத்தில் உள்ள பிரம்மபுத்திரா பகுதிகளில் ஆண்டு தோறும் பருவ மழையின் போது மிகுந்த வெள்ளப்பெருக்கு ஏற்படும் இதில் பாதிக்கப்படுவது காசிரங்கா தேசிய பூங்கா தான்.

இந்த முறை பருவ மழை காரணமாக அசாம் காசிரங்கா தேசிய பூங்காவில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது இதில் சிக்கி 24 அரியவகை விலங்குகள் உயிரிழந்தன.

உலகிலேயே ஒற்றைக்கொம்பு மான்கள் இருக்கக்கூடிய ஒரே பூங்கா இந்த காசிரங்கா பூங்கா தான் இதில் இன்னும் நிறைய வகையான அரிய வகை உயிரினங்கள் பாதுகாக்கப்படுகின்றன.

ஆண்டுதோறும் பருவமழை தொடங்கும் போதே அசாமில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அங்கு வாழும் அனைத்து உயிரினங்களும் அழிவை நோக்கி செல்கின்றன. இதை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இப்பொழுது அதாவது இந்த ஆண்டு காசிரங்கா தேசிய பூங்காவில் 70 சதவீதம் நிலப்பரப்பு நீரில் மூழ்கி விட்டது இதுதொடர்பான தகவல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது.

இந்நிலையில் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த விலங்குகள் ஹாக் எனப்படும் நாற்கொம்பு மண்கள், இரண்டு சதுப்பு நிலம் ஆண்கள், இரண்டு காண்டா மிருகங்கள், காட்டெருமைகள், மலைப்பாம்பு, நாகூர் வகை குரங்குகள் போன்ற இன்னும் பல விதமான உயிரினங்கள் இதில் உயிரிழந்தனர்.

இதில் நான்கு வயதான காண்டாமிருக குட்டி உள்ளிட்ட 4 விலங்குகள் பத்திரமாக மீட்கப்பட்டனர் என தகவல் வெளியாகின்றன.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending