Connect with us

News

கணவனை கத்தியால் குத்திய மனைவி கைது !!!

Published

on

தருமபுரி மாவட்டம் கிருஷ்ணகிரி பாரீஸ் என்ற பகுதியைச் சேர்ந்த இலக்கியா இவர் சேலம் மாவட்டத்தில் உள்ள பாலமுருகன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணமாகி ஒரு வருடம் ஆனபிறகு இவர்களிடையே பிரச்சினை தொடங்கியது. நாளடைவில் இருவருக்கும் இடையே அடி உதை என சென்று கொண்டிருந்தது சிறிது நாட்கள் கழித்து பாலமுருகன் மனைவியின் மீது காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார் அது போன்ற இலக்கியாவும் கணவன் மீது காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.

இவர்கள் இருவரும் சிறிது நாட்கள் தனித்தனியாக வாழ்ந்துவந்தனர் கடந்த வாரம் இலக்கியா கணவர் வீட்டிற்கு சென்று நாம் இனி சண்டை போட வேண்டாம் ஒற்றுமையாக வாழலாம் என இருவரும் சேர்ந்து முடிவெடுத்துள்ளனர்.

இதன் பிறகு செப்டம்பர் 26ம் தேதி இரவு தனது மனைவி யாரிடமோ தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்ததை பாலமுருகன் கண்டு யாரிடம் பேசுகிறாய் என்று உரையாடல் இறங்கியது இதில் கோபமடைந்த இலக்கிய சமயலறைக்கு சென்று கத்தியை எடுத்து பாலமுருகன் மார்பில் குத்தி உள்ளார்.

அக்கம்பக்கத்தினர் பாலமுருகனின் அலறல் சத்தத்தை கேட்டு வீட்டிற்கு சென்று பார்த்தபோது ரத்தவெள்ளத்தில் இருந்த பாலமுருகனை பக்கத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர்.

அக்கம்பக்கத்தினர் இலக்கியம் மீது புகார் அளித்துள்ளனர் அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending