Connect with us

News

கட்டைப்பையில் குழந்தையை கடத்திய பெண் !!!

Published

on

தஞ்சை அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.

பிறந்து நான்கு நாட்கள் ஆன பச்சிளம் குழந்தையை கடத்தியுள்ளனர் இதுகுறித்து சிசிடிவி காட்சிகள் வெளியாகியிருக்கிறது.

தஞ்சாவூரில் பர்மா காலனியை சேர்ந்த குணசேகரன் வயது இருபத்தி நான்கு ராஜலட்சுமி வயது 22 தம்பதிக்கு கடந்த ஆண்டு காதல் திருமணம் நடைபெற்றது கடந்த நான்கு நாட்களுக்கு முன் தஞ்சாவூர் ராசா மிராசுதாரர் இந்த அரசு மருத்துவமனையில் இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது.

மருத்துவமனையில் அந்தப் பெண்ணிற்கு உதவுவது போல அங்கு வந்த ஒரு பெண் நான்கு நாட்கள் அவருடன் இருந்து அனைத்து உதவிகளையும் செய்துள்ளார் நான்காவது நாள் குளித்துவிட்டு ராஜலட்சுமி வெளியில் வந்த பொழுது குழந்தையை காணவில்லை இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ராஜலட்சுமி உடனே தனது கணவருக்கு தகவல் கொடுத்து அக்கம்பக்கத்தில் தேடி உள்ளார் இதுகுறித்து ராஜலட்சுமியின் கணவன் குணசேகரன் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார்.

போலீசார் மருத்துவமனையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போலீசார் அந்தப் பெண் கட்டைப்பையில் அந்தப் பச்சிளம் குழந்தையை கடத்தி சென்றது வீடியோவில் தெரியவந்தது போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட அந்த பெண்ணை தேடி வருகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending