Connect with us
ஒரு உயிரை காப்பாற்றிய மனிதருக்கு பாராட்டு !!! ஒரு உயிரை காப்பாற்றிய மனிதருக்கு பாராட்டு !!!

News

ஒரு உயிரை காப்பாற்றிய மனிதருக்கு பாராட்டு !

Published

on

கடந்த டிசம்பர் 9ஆம் தேதி பெரம்பலூர் மாவட்டத்தில் ஒதியம் என்ற சிறு கிராமத்தில் ஒரு சிறிய குரங்கு ஒன்றை தெரு நாய்கள் சேர்ந்து விரட்டி அதனை கடித்துள்ளது மேலும் காயங்களுடன் அந்த குரங்கு மரக்கிளையில் ஏறியது.

மரக்கிளையில் ஏறிய பிறகு இந்த குரங்கு மயக்கம் அடைந்து உள்ளது இதனை பார்த்த ஓட்டுநர் பிரபு என்பவர் இந்த குழந்தையை காப்பாற்ற வேண்டும் என எண்ணி பெரம்பலூரில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனைக்கு நண்பர்கள் உதவியுடன் கொண்டு சென்றுள்ளார்.

ஒரு உயிரை காப்பாற்றிய மனிதருக்கு பாராட்டு !!!

மருத்துவமனைக்கு செல்லும் பாதி வழியிலே இந்த குரங்கு உயிரிழந்தது அதன்பிறகு வாகனத்தை நிறுத்தி கீழே இறங்கி இந்த குரங்கை காப்பாற்ற வேண்டுமென குரங்கின் இதயத்துடிப்பு மீண்டும் செயல்பட குரங்கின் நெஞ்சை தொடர்ந்து அழுத்திக் கொண்டே இருந்தார்.

சிறுது நேரம் கழித்தும் எந்த அசைவும் இல்லாத காரணத்தால் அவர் வாய் வைத்து குரங்கின் வாய்யுடன் ஊதியுள்ளார் அதன்பின் அதன் பிறகு அந்த குரங்கு திடீரென உயிர் பெற்றது உடனடியாக அவர் அந்தக் குரங்கை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

இவர் குரங்கை காப்பாற்றியதை அவரது நண்பர்கள் வீடியோ எடுத்து இணையதளத்தில் பதிவிட்டுள்ளனர் இந்த வீடியோ தற்போது மிகவும் வைரலாக பரவிக் கொண்டு வருகிறது மேலும் இவருக்கு மக்கள் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending