Connect with us

Cinema news

உலகம் சுற்றும் நடிகர் அஜித் !!

Published

on

படப்பிடிப்புக்காக ரஷ்யா சென்ற நடிகர் அஜித்குமார் அங்கு 5 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

நடிகர் அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார் இதில் இந்தி நடிகை ஹீரோயினாக நடிக்கிறார். இந்த படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் சேசிங் காட்சி ஒன்று படமாக்க வேண்டி இருந்தது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரஷ்யா சென்றனர் அங்கு பிரம்மாண்டமான சேசிங் காட்சி 10 நாட்கள் படக்குழு படமாக்கியது.

அதை முடித்துவிட்டு அனைவரும் திரும்பிய நிலையில் நடிகர் அஜித்குமார் மட்டும் இன்னும் ரஷ்யாவிலே தங்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ரஷ்யாவில் சுமார் ஐந்தாயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்ய திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இதற்காக ஏற்கனவே ரஷ்யா பைக் வீரர்களை சந்தித்து ஆலோசனை பெற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ரஷ்யாவில் விலை உயர்ந்த பைக்யுடன் நிற்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending