Connect with us

News

உருவாகும் புதிய புயல் வானிலை ஆய்வு மையம் !

Published

on

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் கொட்டி தீர்த்து வருகிறது இந்த பருவமழை இந்த மாதம் தொடங்கியது இதனை அடுத்து புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளதால் அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகம் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதையடுத்து தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக அடுத்த 12 மணி நேரத்தில் தமிழகம் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கன மழையும் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்த கன மழையானது அடுத்த 5 நாட்களுக்கு தொடரும் என அதன் பின் மெதுவாக குறைய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

புதிய காற்றழுத்த தாழ்வு வங்கக்கடலில் அந்தமான் நிக்கோபார் பகுதிகளில் உருவாகி உள்ளது இது புயலாக மாறும் வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது மேலும் வங்கக் கடல் அரபிக் கடல் ஆகிய பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை விதித்துள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending