Connect with us

News

இன்று மாலை கரையை கடக்கும் குலாப் புயல் !!!

Published

on

வங்கக்கடலில் புதிதாக உருவாகியுள்ள குலாப் புயல் இன்று மாலை ஒடிசா ஆந்திரா இடையே கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்துள்ளது.

செப்டம்பர் 24-ஆம் தேதி கிழக்கு மத்திய வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு ஏற்பட்டது இதனையடுத்து அந்த காற்றழுத்த தாழ்வானது மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறியது.

வடகிழக்கு பகுதிகளில் நேற்று காற்றழுத்த தாழ்வு நிலையாக இருந்தது இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறி மேற்கு திசையை நோக்கி சென்றது.

இந்தப் குலாப் புயல் இன்று மாலை ஆந்திரப் பிரதேசம், ஒடிசா இடையேயுள்ள கலிங்கப்பட்டினத்தில் கரையைக் கிடைக்கலாம் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

குலாப் புயல் கரையைக் கடக்கும் பொழுது 75-85 கி.மீ வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளதாகவும் இதன்காரணமாக வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி வெப்பச்சலனம் காரணமாகவும் தமிழகத்தில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று எச்சரிக்கை செய்துள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending