Connect with us

News

இந்தியாவில் 3வது அலைக்கு வாய்ப்பு இல்லை !

Published

on

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் படிப்படியாக குறைந்து கொண்டு வருகிறது இப்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாள் ஒன்றிற்கு 8,000 கீழ் குறைந்துள்ளது.

சில நாட்களுக்கு முன் தீபாவளியின் போது பல மக்களுக்கு கொரோனா தொற்று பரவ வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் எதிர்பார்த்தனர் ஆனால் தீபாவளி முடிந்து சில வாரங்கள் ஆகியும் இதுவரை மக்களுக்கு அவ்வளவு பெரிய தொற்று ஒன்றும் பரவாயில்லை.

இதனால் பல ஆராய்ச்சியாளர்கள் பரிசோதனை முடிவில் கொரோனா தொற்றின் மூன்றாம் அலைக்கு வாய்ப்பில்லை எனவும் மருத்துவர்கள் மற்றும் அசோகா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

நேற்றைய தினம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 7,579 இது மிகவும் குறைந்த எண்ணிக்கையாகும் இதனால் கொரோனா தொற்றினால் மக்கள் பாதிக்கப்படும் அளவு குறைந்துள்ளது ‌‌‌.

மேலும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியும் அதிகரித்து வருகிறது பல மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து கொரோனா தொற்று குறைவதாகவும் கூறப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending