Connect with us

News

பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை

Published

on

இந்தியாவில் ஒரு நாளுக்கு 77 பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகின்றனர் இதுகுறித்து தேசிய குற்ற ஆவண காப்பகம் ஒரு அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிராக பாலியல் பலாத்காரம் மிகவும் அதிகரித்து வருகிறது சிறு குழந்தைகள் என்று பாராமல் கற்பழிப்பு பெருகி வருகிறது.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு நடக்கும் இந்த பாலியல் வன்கொடுமைக்கு சரியான தண்டனை வழங்கினால் மட்டுமே இது போன்ற சம்பவங்கள் நாடு முழுவதும் குறைக்க முடியும்.

சிறிது நாட்களுக்கு முன் அனைவரையும் அதிர வைத்த நிர்பயா வழக்கு குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டதை போல குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும்.

கடந்த ஒரு ஆண்டில் மட்டும் பெண்களுக்கு எதிராக நடந்த வன்கொடுமை கூட்டத்தை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையில் முன்பிருந்ததை விட பெண்களுக்கு எதிரான பலாத்காரம் குறைந்திருப்பதாக தகவல் வெளியாகிறது.

2019 ஆம் ஆண்டு மட்டும் பதியப்பட்ட பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்கு 27,046 அதில் சராசரியாக ஒரு நாளைக்கு 77 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகிறது.

இந்தக் குற்றங்கள் அதிக அளவில் உள்ள மாநிலம் மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, அசாம்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending