Connect with us

News

Wagah எல்லை தாண்டி காதல் நடந்த விபரீதம்

Published

on

பலவிதமான காதல் சினிமாக்களை பார்த்து ரசித்த நம்மவர்களுக்கு நம்ம சாப்ட்வேர் என்ஜினீயர் பிரசாந்தின் நாடு கடந்த காதல் நிறைய வலியும் கொஞ்சம் காஸ்ட்லியானது.

அதாவது ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்த பிரசாந்த் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் மின் பொறியாளராக பணிபுரிந்து வந்தார்.

நெஞ்சம் உருகி காதலித்த பிரசாந்த்: ஒருநாள் காதலியின் புகைப்படத்தை பார்த்து அகமகிழ்ந்து போனதால் அவரை நேரில் பார்ப்பதற்காக 2017 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்குள் சட்டவிரோதமாக நுழைந்துள்ளார் Wagah காதல் இளவரசன் பிரசாந்த்.

அது அவரது தலையெழுத்து காதலியை கண்டு அவளது இதயச் சிறையில் அடைப்பதும் முன்பே அவரை கைது செய்த பாகிஸ்தான் காவல்துறை இஸ்லாமாபாத் சிறையில் அடைத்தது.

அதன்பிறகு பிரசாந்த் பணி நிமித்தமாக பாகிஸ்தான் செல்வதாக வீட்டில் பொய் சொல்லி இருந்த நிலையில் தனது மகன் இரண்டு ஆண்டுகள் ஆகியும் வீடு திரும்பாததால் அவரது தந்தை பாபுராவ் சைதராபாத் மாதப்பூர் போலீசில் புகார் அளித்தார்.

சிறையில் வீணாக போன நான்கு வருடங்கள்: இது பிரசாந்த் காணாமல் போனது குறித்து 2019 ஏப்ரல் மாதம் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் காதலியை தேடி சென்று தாடியுடன் காத்திருந்த பிரசாந்த் பாகிஸ்தானில் இருந்து வெளியேற இயலாமல் தவிப்பதாக செல்போனில் எடுத்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.

அதன் பிறகு நான்கு வருடங்கள் கடந்த நிலையில் இந்த வீடியோ பாபு ராபின் கண்களில் பட இதை ஆதாரமாகக் கொண்டு தன் மகன் பிரசாந்த் பாகிஸ்தானில் தவித்து கொண்டு இருப்பதை சுட்டிக் காட்டி அவரை உடனடியாக மீட்டு தரும்படி தந்தை பாபுராவ் சைபராபாத் போலீஸ் கமிஷனரிடம் வேண்டுகோள் வைத்தார்.

பிரசாந்தை மீட்க நடவடிக்கை: இதை வைத்து மாநில அரசுக்கும் வெளியுறவு அமைச்சகத்திற்கும் காவல் ஆணையத்திற்கும் கடிதம் எழுதினார் சஞ்சனார்.

இந்நிலையில் பாகிஸ்தான் அரசு பிரசாந்தை இந்தியாவிடம் ஒப்படைக்க ஒப்புக்கொண்டது அதன்படி வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் பிரசாந்த் பாகிஸ்தான் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

மகிழ்ச்சியில் குடும்பத்தினர்: காதலியை தேடிச் சென்ற தன் மகன் 4 ஆண்டுகளுக்கு பிறகு குடும்பத்தின் தொடர்ச்சியான முயற்சியால் புதன் மாலை ஹைதராபாத் அழைத்துவரப்பட்டு வியாழக்கிழமை தனது சொந்த ஊரான விசாகப்பட்டினத்தில் வந்து சேர்ந்தார்.

அதன் பிறகு மகனின் வருகையால் மகிழ்ச்சியில் உள்ள குடும்பத்தினர் அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர்.

அதன்பிறகு அவர் பாகிஸ்தானில் இருந்த அந்த நான்கு வருடத்திலும் எப்படியாவது தனது காதலியை சந்தித்து விட மாட்டோமா என்ற தவிப்பில் நாட்களை நகர்த்தி வந்தார்.

பெண் பெயரில் பழகியது???? : பிரசாந்த் தனது காதல் உண்மை என்றும் எப்படியும் தனது காதலி தனக்கு கிடைப்பார் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்தவர் இப்போதுதான் ஒரு தெளிவான மனநிலைக்கு வந்துள்ளார்.

எனவே பிரசாந்திடம் பெண் பெயரில் பழகியது Fake I’d ஆக இருந்தால் பிரசாந்தின் நாடுகடந்த காதல் நித்தியின் இல்லாத கைலாச தீவிற்கு வழி தேடுவது போன்றதாகிவிடும்.

உதாரணமாக இதற்கு தான் சொல்லுறது காதலிக்கும் பெண்ணை நம்புபவன் ஏமாற்றப்படுவான்.

ஆனால் பெண்கள் எல்லோரும் அப்படி இல்லை காதலித்தவனுக்காக உயிரை கொடுக்கும் பொண்களும் நாம் வாழும் இந்த பூமியில் தான் இருக்கின்றனர்.

2 Comments

2 Comments

  1. Pingback: KSRTC என்ற பெயர் யாருக்கும் சொந்தம் - News crowns

  2. Pingback: Top5 Highest Wicket Takers In T20 In India - cricketcountdowns

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending