Connect with us

Cinema news

ஆபாசமாக பேசியதாக பிரபல டிக் டாக் திவ்யா கைது

Published

on

தேனி மாவட்டத்தின் அருகே நாகலாபுரத்தைச் வசித்து வரும் ராஜூ மகள் சுகந்தி (33) என்பவர் தன்னையும் தனது குடும்பத்தினரையும் குறிப்பிட்டு திவ்யா சமூக வலைதளத்தில் ஆபாசமாகவும் அவதூறாகவும் விடியோக்களை பதிவேற்றம் செய்து வருவதாக கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.

இது போன்ற தொடர் சம்பவம் இவர் செய்து வந்தது பல ஊடகங்களில் இருக்கும் மக்களுக்கு நன்றாக தெரியும்.

இது தொடர்பாக திவ்யாவை தனிப்படை போலீசார் தேடிச் சென்று நாகூரில் கைது செய்து தேனிக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

அதன் பின் தேனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட திவ்யா 15 நாட்கள் நீதிமன்ற காவலில் நிலக்கோட்டை மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இவ்வாறு இணையதளத்தில் ஆபாசமாக பேசுவது மிகவும் கடினமான கண்டிக்கும் செயலாகும் என நீதிமன்றத்தில் கூறியுள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending