Connect with us

News

ஆபத்தான நிலையில் குழந்தைகள் !!!

Published

on

ஆபத்தான நிலையில் குழந்தைகள் ஆப்கானிஸ்தானில் சில நாட்களாக தீவிரவாத இயக்கம் தலைவிரித்து ஆடி வருகிறது. இதனையொட்டி காபூல் விமான நிலையம் அருகே குண்டுவெடிப்பு நடந்துள்ளது.

இதில் 4 குழந்தைகள் உட்பட 6 பேர் பலியாகி உள்ளார்கள் ஆப்கானிஸ்தான் நாட்டை விட்டு வெளியேற காபுல் விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்ட வண்ணம் இருந்தனர். இதன் காரணமாக ஐஎஸ் தீவிரவாத இயக்கம் விமான நிலையத்தில் நடத்திய இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதலில் 170 க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர்.

இதனையடுத்து இன்று இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. காபுலில் இருந்து வடகிழக்கு குடியிருப்பில் நடந்த இந்த குண்டு வெடிப்பிற்கு ராக்கெட் தாக்குதலே காரணம் என தெரியவந்துள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டை விட்டு விமானத்தில் வெளியேறிய கர்ப்பிணிப் பெண் சுமார் 30 ஆயிரம் அடிக்கு மேல் விமானம் பறந்து கொண்டிருந்த நிலையில் அந்தப் பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளது. (ஆபத்தான நிலையில் குழந்தைகள்)

26 வயதான அந்த பெண் துருக்கி ஏர்லைன்ஸ் விமானம் பறந்து கொண்டிருக்கும் போது பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அப்பெண்ணுக்கு விமான பணியாளர்கள் சேர்ந்து பிரசவம் பார்த்துள்ளனர் 37 ஆயிரம் அடிக்கு மேல் விமானம் பறந்து கொண்டு இருக்கும் பொழுது ஒரு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் குழந்தையும் நலமாக இருப்பதாக விமான துறை அறிவித்துள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending