Connect with us
ஆசிரியர் தொல்லை மாணவி தூக்கிட்டு தற்கொலை !!! ஆசிரியர் தொல்லை மாணவி தூக்கிட்டு தற்கொலை !!!

News

ஆசிரியர் தொல்லை மாணவி தூக்கிட்டு தற்கொலை

Published

on

தனியார் பள்ளியில் பயின்று வரும் ஒரு மாணவி சிறிது நாட்களாக பள்ளிக்கு செல்ல விருப்பம் தெரிவிக்காமல் அந்த மாணவி வேறொரு பள்ளியில் என்னை சேர்க்குமாறு பெற்றோரிடம் கேட்டுக் கொண்டுள்ளார் மேலும் பெற்றோர்களும் இதற்கு சம்மதம் தெரிவித்து அந்த தனியார் பள்ளியில் இருந்து மாற்று சான்றிதழ் கோரி தலைமை ஆசிரியரிடம் கேட்டு உள்ளார்கள்.

இதனையடுத்து நேற்று தனியாக அறையில் இருந்த மாணவி மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்து முதல்கட்ட விசாரணையை துவங்கினார்.

இதில் அவர் பள்ளியில் ஒரு ஆசிரியர் பாலியல் தொல்லையில் ஈடுபட்டுள்ளதாகவும் சக மாணவ மாணவியர் தொலைபேசி எண்ணிற்கு ஆபாசமான மெசேஜ்களை அனுப்புவதாகவும் தெரியவருகிறது.

சிறிது நாட்களுக்கு முன்னர் அந்த மாணவியை விடாமல் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் சக மாணவிகள் விசாரணையில் தெரிவித்துள்ளனர் இதனையடுத்து அந்த மாணவியின் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள் எனது மகளுக்கு நடந்த கொடூரம் வேறு எந்த குழந்தைக்கும் ஏற்படக் கூடாது என்ற நோக்கத்தில் இந்த போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.

இதனை அடுத்து மாணவி விழுந்ததற்கு நீதி கேட்டு அனைத்து இந்திய மகளிர் சங்கம் மற்றும் ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் சம்பந்தப்பட்ட ஆசிரியரை கைது செய்ய வலியுறுத்தியும் அவரின் புகைப்படத்தை கிழித்தெறிந்து காலணியால் அவர் புகைப்படத்தை உதைத்தும் இந்த இந்தப் போராட்டத்தை நடத்தினர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending