Connect with us

News

அரியர் மாணவர்களுக்கு கொடுத்த நல்ல வாய்ப்பு !

Published

on

அண்ணா பல்கலைக்கழகத்தில் 2001ஆம் ஆண்டு முதல் இதுவரை படித்து வரும் மாணவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் அண்ணா பல்கலைக்கழகத்தில் 2001 முதல் இதுவரை படித்து வரும் அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு நடத்த சிண்டிகேட் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

வரும் நவம்பர் – டிசம்பர் மாதம் நடக்கும் தேர்வில் பங்கேற்று தேர்வு எழுதலாம் எனவும் தேர்வு எழுத விருப்பமுள்ளவர்கள் இந்து செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 4ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனக் கூறப்பட்டிருக்கிறது.

தேர்வு எழுத விருப்பம் உள்ளவர்கள் https://coe1.annauniv.edu என்ற இணையதளத்தில் வழக்கமாக தேர்வு கட்டணம் செலுத்தும் கணக்கிலிருந்து கூடுதலாக ரூ.5,000 செலுத்த வேண்டும் எனவும் இது தொடர்பான அனைத்து தகவல்களும் வரும் அக்டோபர் மாதத்தில் தெளிவாக அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending