Connect with us

Corona

அரசு மருத்துவமனையில் கெரோனா உறுதி

Published

on

கொரோனா உறுதி,
அவிநாசி அரசு மருத்துவமனையில் 3 மருத்துவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. அரசு மருத்துவமனையில் பணிபுரியும் 2 உதவியாளர்களுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் அவினாசி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் உதவியாளர்களுக்கும் மற்றும் செவிலியர் பணியாளர்களுக்கும் தொடர்ந்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்காலிகமாக மருத்துவ முறையை மாற்றி வேறு இடத்தில் அமைக்கப்படுவதாக தகவல் வெளியாகி வருகிறது. மேலும் அவிநாசி அரசு மருத்துவமனை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இதனையடுத்து நகராட்சி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அனைத்து நோயாளிகளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நோயாளிகள் மாற்று அரசு மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதனையடுத்து சுகாதாரத்துறை தரப்பில் கூறுகையில் கொரோனா மூன்றாவது அலை வருவதற்கான அறிகுறிகள் இதுதான் என கூறி உள்ளனர். மேலும் இரண்டு முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.

கிருமிநாசினி வைத்து கைகளை சுத்தப்படுத்த வேண்டும் வெளியே செல்லும் பொழுது மக்கள் இடைவெளியை கடைபிடிக்கவேண்டும்.

இவ்வாறு செய்தால் மட்டுமே மூன்றாவது அலையிலிருந்து அனைவரும் தற்காத்துக் கொள்ள முடியும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending