Connect with us

News

அரசு பேருந்தை உடைத்த இரு மாணவர்கள் கைது !

Published

on

சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்தவர்கள் சாமுவேல், நவின் மற்றும் அருண்குமார் இவர்கள் மூவரும் அங்குள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகின்றனர்.

இவர்கள் நேற்றைய தினம் வில்லிவாக்கம் வழியாக மூவரும் ஒரு பைக்கில் சென்று கொண்டிருந்தனர் அந்த வழியாக வந்த வில்லிவாக்கத்தில் இருந்து பெசன்ட் நகர் செல்லும் பேருந்து எண் 47 அவ்வழியாகச் சென்று கொண்டிருந்தது.

இவர்கள் மூவரும் அந்த பேருந்தில் இடித்ததாகவும் இடித்து கீழே விழுந்ததாகவும் கூறப்படுகிறது இதனையடுத்து இந்த மூன்று பேரும் பேருந்து ஓட்டுநர் மணிவண்ணனுடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

அதன் பின் இந்த மூன்று மாணவர்களும் அந்த பேருந்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்து தப்பி ஓடியுள்ளனர் மேலும் பேருந்து ஓட்டுனர் வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் காவலர்கள் இந்த மாணவர்களை விசாரணை செய்ய சென்ற பொழுது இருவரை மட்டும் கைது செய்துள்ளனர் இதில் திலீப் என்ற மாணவன் ஓடி விட்டார்.

காவல்துறையினர் இரு மாணவர்களையும் விசாரித்து வருகின்றனர் மேலும் தலைமறைவாக உள்ள இன்னொரு மாணவரையும் தேடி வருகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending