Connect with us

News

அரசு உதவி திட்டத்தில் சிறிய மாற்றம் !!!

Published

on

தமிழ்நாடு அரசு திருமண ஊக்கத் தொகையாக வழங்கிக்கொண்டிருந்த 25 ஆயிரம் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் 8 கிராம் தங்கம் ஆகியவற்றில் சிறிதாக மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த உதவி திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்புபவர்கள் வீட்டில் யாரேனும் அரசு பணியில் இருந்தால் இந்த சலுகை அவர்களுக்கு செல்லுபடியாகாது.

மணமகளுக்கு 18 வயதும் மணமகனுக்கு 21 வயதும் கடந்து உள்ளதா என்பதை சரி பார்க்கவும் அவ்வாறு கடந்து இருப்பின் மட்டுமே இந்த சலுகைக்கு விண்ணப்பிக்க முடியும்.

அதன்பிறகு விண்ணப்பிப்பவர்கள் மாடி வீடு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருக்கக் கூடாது அவ்வாறு வைத்திருப்பின் இதற்கு விண்ணப்பிக்க தகுதி அற்றவர்கள்.

அந்த குடும்பத்தில் ஆண்டு வருமானம் 72,000 ரூபாய்க்குக் கீழ் பெற்றிருக்க வேண்டும் மற்றும் அந்த திருமணம் திருமண மண்டபத்தில் நடைபெற கூடாது அவ்வாறு நடைபெற்றால் இந்த சலுகை அவர்களுக்கு கிடையாது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending