Connect with us
அதிமுக ராஜேந்திர பாலாஜிக்கு அரெஸ்ட் வாரண்ட் !!! அதிமுக ராஜேந்திர பாலாஜிக்கு அரெஸ்ட் வாரண்ட் !!!

News

அதிமுக ராஜேந்திர பாலாஜிக்கு அரெஸ்ட் வாரண்ட்

Published

on

முன்னாள் அதிமுக பால்வளத்துறை அமைச்சராக பொறுப்பில் இருந்தவர் ராஜேந்திர பாலாஜி இவர் பல மக்களுக்கு அரசு ஆவின் நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாக கூறி பல கோடி ரூபாய் ஏமாற்றி இருப்பது தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து இவரின் மீதும் அவரின் உதவியாளர்கள் இருவரின் மீதும் வழக்குகள் தொடுக்கப்பட்டு விசாரணை நடந்து வந்தது விசாரணையில் இவர் மீது இருந்த குற்றம் உண்மைதான் என உறுதி செய்யப்பட்டது.

மேலும் இவர் முன்ஜாமின் மனு தாக்கல் செய்தார் அந்த மனு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அவர் அந்த நேரம் விருதுநகர் அதிமுக கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார் இந்த தகவல் கேட்டதும் உடனடியாக தலைமறைவாகி விட்டார்.

இதன்பிறகு விருதுநகர் காவலர்கள் 4 தனிப் பிரிவுகள் அமைக்கப்பட்டு இவரை வலை வீசி தேடிக் கொண்டு வருகின்றனர் மேலும் மாநில எல்லைகளில் காவலர்களை குவித்துள்ளனர்.

இன்று டிசம்பர் 20ஆம் தேதி அவர் பெங்களூரில் தலைமறைவாகி இருப்பதாக தகவல் வெளிவந்தது இதனையடுத்து காவலர்கள் தனிப்படை அமைத்து அவரை பிடிக்க பெங்களூர் சென்றுள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending