Connect with us

Corona

அக்டோபர் 31 வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது !!

Published

on

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் கடந்த வாரம் சில தடை உத்தரவுகள் முதலமைச்சரால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திருவிழாக்கள், சமூக நலக்கூடங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் சில இடங்களை தற்காலிகமாக மூடி வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சில பொதுக் கூட்டங்கள் மற்றும் திருவிழாக்கள் தியேட்டர்கள் தற்காலிகமாக மூடி வைக்கப்பட்டிருந்தது.

தற்போது கடந்த வாரம் தியேட்டர்களிலும் திருவிழாக் கூட்டங்கள் 50 சதவீத விழுக்காடுகளுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து இந்த அமைச்சர் நேற்றைய தினம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்.

இதில் திருவிழாக்கள், தியேட்டர்கள், சமூகநல கூட்டங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் அனைத்து பகுதிகளிலும் தற்காலிகமாக மூடி வைக்க அக்டோபர் 31 வரை தடை உத்தரவு இடப்பட்டுள்ளது என அதிகாரபூர்வமாக தகவல் வெளியாகியுள்ளது.

பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் சுழற்சி முறையில் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சமூக கூட்டங்கள் மற்றும் திருவிழாக்கள் நடத்த அனுமதி அளிக்கப்படாத காரணத்தினால் இன்று விநாயக சதுர்த்தி எளிமையான முறையில் மக்கள் பார்வையில் நடத்த முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending